கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
கடந்த 2022ம் ஆண்டில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சர்தார். இந்த படத்தின் வெற்றி விழாவின் போது ‛சர்தார் 2' உருவாகும் என தெரிவித்தனர். இந்த நிலையில் விரைவில் இந்தபடம் தொடங்கும் என்கிறார்கள். இந்த பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதில் முதல்பாகத்தில் நடித்த கார்த்தி, ராஷி கண்ணா நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.