அஜித் பவாருக்கு நிதித்துறை… பாஜக போட்ட மாஸ்டர் பிளான்… மகாராஷ்டிரா அரசில் பலே மாற்றம்!

2024 மக்களவை தேர்தல் தான் ஒரே டார்கெட் என்ற நோக்கத்தில் மத்தியில் ஆளும் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்காக ஆதரவு அலையை பரிசோதித்து பார்த்து கொண்டிருக்கிறது. பலமான கட்சிகளை உடைப்பது, அதிருப்தி தலைவர்களை கட்சியில் சேர்ப்பது, ஆளும் கட்சி தலைவர்கள் மீது ரெய்டு அஸ்திரங்களை ஏவுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாஜக அரசியல் பிளான்

இதில் கடந்த சில வாரங்களாக அனல் பறந்து கொண்டிருப்பது தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் தான். நமது மாநிலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து ரெய்டு, கைது நடவடிக்கைகள் ஏவப்பட்டன. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை தட்டி தூக்கியது பாஜக. அவர் மீது பல்வேறு வழக்குகள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நிலுவையில் இருக்கின்றன.

அஜித் பவார் ஆடிய கேம்

இப்படியே விட்டால் ஆபத்து எனக் கருதி ஒரே தாவில் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி பக்கம் தாவிவிட்டார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கோபமடைந்து, அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் சரத் பவார் தான் என் தலைவர் எனக் கூறிக் கொண்டே பாஜக கூட்டணியில் அஜித் பவார் ஐக்கியமாகி இருக்கிறார்.

துணை முதலமைச்சர் பதவி

இவர் செல்லும் போதே திரை மறைவில் பலமான காய் நகர்த்தல்கள் நடந்திருப்பது தெரிகிறது. ஏனெனில் கூட்டணியில் இணைந்ததுமே ஜாக்பாட் அடித்தது போல துணை முதலமைச்சர் பதவி கிடைத்து விட்டது. ஆனால் அஜித் பவாருக்கும் இது ஒன்றும் பெரிதல்ல. ஏற்கனவே 4 முறை துணை முதலமைச்சர் பதவியை வகித்து விட்டார். அவரது டார்கெட் என்பது முதலமைச்சர் நாற்காலியாக தான் இருக்கும்.

என்ன காரணம்?

இருப்பினும் கட்சி தலைவர் சரத் பவார் மீதான அதிருப்தி மற்றும் தன் மீதான வழக்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கிடைத்த வரை லாபம் என்பது போல் அணி மாறியிருக்கலாம். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டிருந்தது. துறைகள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது.

அமைச்சரவையில் இடம்

இந்நிலையில் அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு தற்போது (ஜூலை 14) வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் பவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் விநியோகத்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.