முன்னணி சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு ஆய்வுப் பயணம்

பெருமளவான சீன தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளமுடியுமான முதலீடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தனர்.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழிற்துறை, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், விவசாயம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்குத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட தகுவோவென் கல்சர் நிறுவனத்தின் (Daguowen Culture Co) தலைவர் Zhang Qihua, சர்வதேச கலாசார பரிமாற்றம் மற்றும் உலகளாவிய நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதோடு, சீனாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை கூட்டாக ஊக்குவிப்பதற்காக Connaissance De Ceylon நிறுவனத்தின் தலைவர் சந்திரா விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.

Zhejiang பிரபல பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி திருமதி Jin Mei Yang இலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டங்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்தார்.

மனித ஆரோக்கியத்திற்கான மனித கல்லீரல் செல்களுக்கும் இரத்தினக் கற்களுக்கும் இடையிலான உறவை ஆராயும் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவான Wuxin குழுமத்தின் தலைவர் திருமதி Xie Yueyu, புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு உதவுவதற்காக இலங்கையில் கிளை ஒன்றை நிறுவ ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தூதுக்குழுவிற்கு, லான்ஸ்ஹோ ஜெனரல் மெஷின் உற்பத்தி நிறுவனத்தின் (Lanzhou General Machine Manufacturing Co.) பொது முகாமையாளர் திருமதி. ஜாங் சியாமி, (புதிய மின்சக்தி தொழில்நுட்பத்திற்கான ஹைட்ரஜன் சக்தி கைத்தொழில் பூங்கா- ஷாண்டோங் ஜுஜின்லாங் குழுமத்தின் தலைவர் லி ஜெங்குவோ, ஷென்டியன் கோ டெக்னாலஜி நிறுவனத்தின் (Shenzhen Zhongdian Core Technology Co., Ltd ) தலைவர் Zhou Wenlong, அதன் நிறைவேற்று உதவியாளர் லீ மின், அந்தோனி வால்டர் பியானோவின் (Anthony Walter Piano) தலைவர் மற்றும் வுக்சின் பொது நல மன்றத்தின் (சர்வதேச கலை மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு) நிறைவேற்றுத் தலைவர் Guo Tingting மற்றும் வுக்சின் குழுமத்தின் (அவசரகால சீன மருத்துவ உதவி மற்றும் சீன மருத்துவமனைகளுடனான ஒத்துழைப்பு) பொது முகாமையாளர் (சியாவோ லிங்) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.