மீண்டும் இணைந்த ஹிருதயம் கூட்டணி
கடந்த ஆண்டில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் ஹிருதியம். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படம் ஆனது. இந்த நிலையில் நேற்று பிரணவ் மோகன்லால் பிறந்தநாள் முன்னிட்டு ஹிருதியம் கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, மேரி லென்ட் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தை வினித் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இதில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தயான் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப், நீர் மாதவ் ஆகியோருடன் நடிகர் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ‛வர்ஷங்களுக்கு சேஷம்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.