வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: சிவிங்கிப்புலிகள் இறப்பு தொடர்கதையாகி வருகிறது. இன்று மேலும் சூரஜ் என்ற சிவிங்கிப்புலி இறந்தது.
நம் நாட்டில் சிவிங்கி புலிகள் அழிந்ததை அடுத்து, அவற்றை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும், கொண்டு வரப்பட்டு. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் ஜுவாலா என்ற சிவிங்கிபுலி நான்கு குட்டிகளை ஈன்றது. இதில், மூன்று குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதேபோல் சாஷா எனும் பெண் சிவிங்கி புலி, சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதே மார்ச்சில் உயிரிழந்தது. உதய் என்ற ஆண் சிவிங்கி புலி, ஏப்ரலில் இறந்தது.பின்னர் தக் ஷா என்ற பெண் சிவிங்கிபுலி, இனச்சேர்க்கையின் போது காயமடைந்து மே மாதம் இறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தேஜாஸ் என்ற ஆண் சிவிங்கி புலி இறந்தது.
இந்நிலையில் இன்று சூரஜ் என்ற சிவிங்கிப்புலி இறந்தது, உடற்கூராய்வில், பெண் சிவிங்கி புலியுடன் சண்டையிட்டு காயமடைந்த நிலையில் இறந்ததாகவும், கடந்த 4 மாதங்களில் இதுவரை 8 சிவிங்கிபுலிகள் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 16 சிவிங்கி புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement