ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு 450சிசி என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் உட்பட ஹண்டர் 450 ரோட்ஸ்டெர் மாடலையும் மோட்டோவெர்ஸ் அரங்கில் நவம்பர் 24 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா தற்பொழுது மோட்டோவெர்ஸ் (Motoverse) என மாற்றப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 24, 2023 முதல் 26 வரை கோவா மாநிலத்தில் உள்ள வகடோர் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளதால் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
Royal Enfield Himalayan 450
அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450 பைக்கில் புதிதாக பொருத்தப்பட உள்ள 450சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 35hp பவருக்கு கூடுதலாகவும், 30 Nm டார்க் வெளிப்படுத்தக்கூடும். 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கலாம்.
வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் அலகினை வெளிப்புற சுற்றளவை கொண்டு கியர்-பொசிஷன் இன்டிகேட்டர் மையத்தில் அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கியர் இண்டிகேட்டரின் வலதுபுறத்திலும் மற்றும் எண்கள் மிகப் பெரிய எழுத்துருவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
பைக் மாடலில் 21 இன்ச் பெரிய முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக ஸ்க்ராம் 450 பைக்கில் 19-இன்ச் முன் சக்கரத்தைப் பெறவதும், பின்புறத்தில் 17-இன்ச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நிலைமைகளைச் சமாளிக்கும் அட்வென்ச்சர் மாடல் விரைவில் விற்பனைக்கு வரக்கூடும்.
2023 EICMA அரங்கில் முதன்முறையாக ஹிமாயலயன் பைக் அறிமுகம் செய்யப்படலாம். வரும் 7 நவம்பர் 2023 – 12 நவம்பர் 2023 வரை இத்தாலி மிலன் நகரில் நடைபெறுகின்றது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூபாய் 2.50 லட்சத்துக்குள் வெளியாகலாம்.