மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மைசூரு:-

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மாவட்டம் இன்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்தநிலையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பெண்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் தசரா மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று, கன்னட ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தன.

பக்தர்கள் குவிந்தனர்

இதனை காண அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்தனர். இதில் மத்திய மந்திரி ஷோபா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஆகியோர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கன்னட ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் சாமுண்டி மலைக்கு வாகனங்களில் செல்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தவர்களுக்கு லலிதா பேலஸ் மகால் பின்புறம் உள்ள மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

அவர்கள் அங்கிருந்து அரசு பஸ் மூலம் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர். மைசூரு உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ெஹலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னட ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி கோவிலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.