Honda Dio 125: பழைய டியோ, ஆக்டிவா மாதிரி இல்லை; இந்தப் புது டியோவில் ஏகப்பட்ட ஸ்பெஷல் இருக்கு!

மொக்கையான உதாரணம்தான்; அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை சூர்யா என்று வைத்துக் கொள்வோம். டியோ ஸ்கூட்டரை அவர் தம்பி ‘கார்த்தி’ என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது, ஆக்டிவா கொஞ்சம் சைலன்ட் பார்ட்டி என்றால், டியோ கொஞ்சம் துறுதுறு பார்ட்டி. நீங்கள் சாலைகளில் டியோ ஓட்டும் பசங்களைப் பார்த்தாலே தெரியும். இரண்டுமே அண்ணன் – தம்பி என்பதற்காக இந்த உதாரணம்.

ஓகே! அப்படிப்பட்ட டியோ ஸ்கூட்டர், இனிமேல் 125 சிசியில் புத்தம் புதுசாக வரப் போகிறது. இதுவரை 110 சிசியில் பறந்து கொண்டிருந்த ஹோண்டா டியோவின் 125 சிசி வெர்ஷன்தான் இப்போது ஸ்கூட்டர் வாங்கப் போகிறவர்களிடம் ட்ரெண்டிங்! ‘புதுசா 125 சிசியில டியோ வந்திருக்காமே’ என்று வியப்பவர்களுக்காக இந்த நியூஸ்!

Honda Dio 125

இன்ஜின், ஃப்ரேம், சஸ்பென்ஷன் சமாச்சாரங்கள்!

கிராஸியா மற்றும் ஆக்டிவா 125 சிசியில் இருக்கும் அதே 123.92 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இதில் இருக்கிறது. ஆனால் இதன் பவர் அவுட்புட் மற்றும் டார்க் விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும், ஆக்டிவா 125–யின் 8.3bhp பவர் மற்றும் 10.4Nm டார்க்கைத் தாண்டி எகிறாது என்றே நினைக்கிறோம். நீங்கள் ஆக்டிவா 125 ஓட்டியிருந்தால், கிட்டத்தட்ட அதே அனுபவம்தான் இந்த டியோவிலும் கிடைக்கும். இதன் எடை 104 கிலோதான். செமையாக ஹேண்ட்லிங் பண்ணலாம்!

இந்த அண்டர்போன் ஃப்ரேமில் இருப்பது வழக்கமான டெலிஸ்கோப்பிக் முன் பக்க ஃபோர்க் மற்றும் பின் பக்க மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்அப் போன்றவை இருக்கின்றன. இதில் கொஞ்சம் தாராளமான கிரவுண்ட் கிளியரன்ஸை வழங்கியிருக்கிறார்கள். 171 மிமீ என்பது டபுள்ஸ் அடித்தாலும் ஸ்பீடு பிரேக்கரில் தட்டாது. 

இதில் முன் பக்கம் டிஸ்க் மற்றும் பின் பக்கம் டிரம் பிரேக் கொடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல் முன் பக்கம் 12 மற்றும் பின் பக்கம் 10 இன்ச் வீல்கள் இருக்கும். இரண்டுமே அலாய் வீல்கள்.

வசதிகள்

இதில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் உண்டு. சிக்னலில் 5 விநாடிகளுக்கு மேல் நின்றால் தானாக ஆஃப் ஆகும். ஆக்ஸிலரேட்டர் முறுக்கினால் தானாகக் கிளம்பும். ஸ்டார்ட் செய்தால் ‘தட தட’ என்று சவுண்ட் கேட்காத சைலன்ட் ஸ்டார்ட்டர், டிஜிட்டல் டேஷ்போர்டு கன்சோல், (இதில் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் மீட்டர் உண்டு), எல்இடி ஹெட்லைட் யூனிட் போன்ற வசதிகள் இருக்கின்றன. 

பழைய டியோ, ஆக்டிவா வைத்திருப்பவர்கள் இதில் ரொம்பக் குறைபடுவார்கள். அதாவது, பெட்ரோல் போடும்போது சீட்டில் இருந்து இறங்க வேண்டும். இந்த டியோ 125–ல் எக்ஸ்டெர்னலாக ஃப்யூல் ஃபில்லிங் வசதி கொடுத்திருக்கிறார்கள். சூப்பர்! இதில் வழக்கம்போல் 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. அதேபோல் இதில் 18 லிட்டர் பூட் ஸ்பேஸ்! இதை டூயல் ஃபங்ஷன் ஸ்லாட் முறையில் சாவி வைத்தே இக்னிஷனில் இருந்து திறந்து கொள்ளலாம். முன் பக்கம் பொருட்கள் வைக்கச் சின்னதாக ஒரு க்ளோவ் பாக்ஸ் உண்டு.

Smart வேரியன்ட்டில் ஒரு முக்கியமான வசதி உண்டு. இதில் கார்களைப் போன்ற Key-Fob கொடுத்திருக்கிறார்கள். சாவி போடாமலே அந்த ஸ்விட்ச்சை ஃப்ளிப் செய்வதன் மூலம்  ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். ஆக்டிவா 6G Smart வேரியன்ட்டில் கொடுத்த அதே வசதி! எலெக்ட்ரானிக் சிஸ்டம் மூலம் இயங்கும் இந்தச் சாவி மூலம், ஸ்கூட்டர் எங்கே இருக்கிறது என்றும் கண்டுபிடிக்கலாம்!

கீழே இறங்காமலே பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்.

வேரியன்ட், விலை, வாரன்ட்டி!

புது டியோவை 83,400 ரூபாய் முதல் 91,300 ரூபாய் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் லாஞ்ச் செய்திருக்கிறது ஹோண்டா. அப்படியென்றால், 2 வேரியன்ட்களா? ஆம், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்மார்ட் (Standard & Smart) என 2 வேரியன்ட்களில் வந்திருக்கிறது டியோ 125 சிசி ஸ்கூட்டர். அதேபோல், இது சுஸூகி ஆவ்னிஸ் 125 ஸ்கூட்டரைவிட விலை குறைவு. யமஹா ரே ZR 125 ஹைபிரிட்டுக்கு இணையான விலை. இதற்கு 3 ஆண்டுகள் ஸ்டாண்டர்டு வாரன்ட்டியும், விருப்பப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியும் தருகிறது ஹோண்டா. 

நீங்கள் ஹோண்டா டியோ 110 சிசி வாங்கப் போகிறீர்கள் என்றால், இந்த 125 சிசியையும் பார்க்கலாம். ஜஸ்ட் சில ஆயிரங்கள்தான் வித்தியாசம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.