பாரிஸ்,
இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து பிரான்ஸ் தேசிய தின கொண்டாடத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், 2 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.