செந்தில் பாலாஜி கேஸ்… சட்டுனு உஷாரான ED… உச்ச நீதிமன்றத்தில் பலே சம்பவம்!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம். அமலாக்கத்துறை ரெய்டில் தொடங்கி 24 மணி நேரத்திற்குள் கைது சம்பவம் அரங்கேறி பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதன்பிறகு விசாரணை வேகமெடுத்து சிறை கதவுகள் இறுக்கமாக மூடப்படும் என எதிர்பார்க்கையில் களம் மாறியது.

செந்தில் பாலாஜி விவகாரம்

நெஞ்சு வலி, பைபாஸ் அறுவை சிகிச்சை என செந்தில் பாலாஜி அதிர்ச்சி அளித்தார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். இதற்கிடையில் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை

அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்க டென்ஷன் அதிகமானது. செந்தில் பாலாஜி தரப்பால் நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. இந்த சூழலில் 3வது நீதிபதி நேற்று வழங்கிய தீர்ப்பு அமைச்சர் தரப்பிற்கு பகீர் கிளப்பியது.

3வது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது செந்தில் பாலாஜி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதற்கு பாஜக தரப்பை சேர்ந்த சிலர் அமைச்சர் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.

மனைவி மேகலா மேல்முறையீடு

இல்லையெனில் அமலாக்கத்துறையின் அதிரடியை பார்க்க வேண்டி வரும் என சீண்டி பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் அடுத்த அதிரடி

அடுத்தகட்டமாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் எனச் சொல்லப்படுகிறது. உடனே உஷாரான அமலாக்கத்துறை முந்திக் கொண்டது. இன்றைய தினம் கேவியட் மனு தாக்கல் செய்துவிட்டது. கேவியட் மனு என்றால் தங்கள் தரப்பின் வாதத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்துவது.

ஓயாத வழக்கு விசாரணை

அந்த வகையில் செந்தில் பாலாஜி தரப்பு ஒருவேளை மேல்முறையீடு செய்தால் அதன் விசாரணையில் தங்களின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு உஷாராக காய்கள் நகர்த்தப்பட்டு வருவதால் செந்தில் பாலாஜி விவகாரம் தற்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.