சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் பாக்ஸ் ஆபீஸில் ஸ்டெடியாக வசூல் செய்து கொண்டிருக்கிறது.
மாவீரன்மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸானது. அந்த படம் தெலுங்கில் மகாவீருடு என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. மாவீரன், மகாவீருடு படங்கள் ரிலீஸான முதல் நாளில் உலக அளவில் ரூ. 10 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியுள்ளது.
மாவீரன் விமர்சனம்உதயநிதிஉதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…வசூல் விபரம்மாவீரன் படம் இரண்டாவது நாளும் உலக அளவில் ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரூ. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மாவீரன். அந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம். தன் முந்தைய படம் சரியாக போகாததால் சம்பளத்தில் ரூ. 5 கோடியை குறைத்துக் கொண்டாராம் சிவகார்த்திகேயன்.
Maaveeran:மாவீரன் எஃப்டிஎஃப்எஸ் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா விஜய்: மாவீரனில் லியோ ஃபர்ஸ்ட் லுக்
விளம்பரம்விருமன் படம் மூலம் நடிகையான அதிதி ஷங்கரின் இரண்டாவது படம் மாவீரன். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க அதிதிக்கு ரூ. 25 லட்சம் கொடுக்கப்பட்டதாம். மாவீரன் படத்தை இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன். அவர் சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்தது.
விமர்சனம்மாவீரன் படம் பார்ப்பவர்கள் எல்லாம் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதை பார்த்துவிட்டு தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் மாவீரன் படம் பார்க்க போகலாம் என நினைத்து கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க முயற்சி செய்பவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். ஏனென்றால் மாவீரன் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது.
நம்பிக்கைஎன் கடைசி படம் மிஸ்ஸாகிவிட்டது. இந்த படம் கண்டிப்பாக மிஸ்ஸே ஆகாது என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அவர் கூறியது போன்று தான் மாவீரன் மிஸ்ஸாகவில்லை. மாவீரன் படத்தில் சத்யாவாக சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றே படம் பார்த்த அனைவரும் தெரிவித்துள்ளனர். இது சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கிய படமாக அமைந்துவிட்டது.
ரசிகர்கள்முன்னதாக படம் ரிலீஸான அன்று காலை சென்னையில் இருக்கும் காசி தியேட்டருக்கும், ரோஹினி தியேட்டருக்கும் சென்றார் சிவகார்த்திகேயன். முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், அங்கு சிவகார்த்திகேயனை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மாவீரன் ரிலீஸை திருவிழா போன்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
எஸ்.கே. 21மாவீரன் படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்து சிவகார்த்திகேயன் நிம்மதி அடைந்திருக்கிறார். மாவீரன் ஸ்டெடியாகிவிட்டதால் தன்னுடைய எஸ்.கே. 21 படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுவிட்டார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருகிறார். எஸ்.கே. 21 படத்திற்காக தன் ஹேர்ஸ்டைலை மாற்றினார் சிவகார்த்திகேயன். அது யாருக்கும் தெரியக் கூடாது என்றே மாவீரன் பட நிகழ்ச்சிகளுக்கு குல்லா அணிந்து வந்தார்.