ஜெருசேலம் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு, 73, பிரதமராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் அந்நாட்டின் பிரதமராக உள்ளார்.
தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வந்த நெதன்யாகு, வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது நலமுடன் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் நெதன்யாகு பிரதமராக பதவி ஏற்பதற்கு முன், கடந்த அக்டோபரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில், நீதித் துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள நெதன்யாகு முயற்சித்ததை அடுத்து, அவருக்கு எதிராக திரண்ட அந்நாட்டு மக்கள், கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement