An Air India flight from Sydney to Delhi caused a stir after a passenger assaulted an officer | சிட்னியிலிருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் அதிகாரியை தாக்கிய பயணியால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டில்லிக்கு கடந்த 9-ந்தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது இருக்கையை மாற்றிக் கொள்வது தொடர்பாக பயணி ஒருவர் விமான ஊழியர்கள் 5 பேரிடம் தகராறு செய்தார்.

அப்போது அங்கு வந்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அதிகாரியை அந்த பயணி திடீரென்று கன்னத்தில் அறைந்தார். தலையை பிடித்து தள்ளினார்.இதையடுத்து அந்த பயணியை சக ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அதிகாரியை தாக்கிய பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சிட்னியில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் எச்சரிக்கையை மீறி நடந்து கொண்டார்.ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்டார். இது எங்கள் ஊழியர் உள்பட பயணிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது.

விமானம் டில்லியில் தரையிறங்கியதும் பயணி, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கழகத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.