Maaveeran: மோசமான விமர்சனங்களால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. கடந்த 14 ஆம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

இப்படத்தின் முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்த வாரமும் எந்த பெரிய படமும் வெளியாகாததால் மாவீரன் திரைப்படத்தின் மவுசு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்காடுகின்றது.

மாவீரன் வெற்றி

இந்நிலையில் மாவீரன் படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் அமைந்துள்ளன. கதைக்களம், திரைக்கதை, யோகி பாபுவின் நகைச்சுவை என பல விஷயங்களை ரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.குறிப்பாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து போயிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

Jailer: ரசிகர்களின் கவனத்திற்கு…ஜெயிலர் படம் பார்க்க இப்படி தான் வரணுமாம்..!

இதுவரை கலகலவென ஜாலியாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் மிகவும் சீரியஸாக நடித்திருந்தார். கெட்டப் மற்றும் உடல்மொழி என அனைத்திலும் வித்யாசம் காட்டி சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்தது ரசிகர்களிடம் வரவேற்பைப்பெற்றது. மேலும் ரசிகர்களுக்கு இது புது விதமான அனுபவத்தையும் கொடுத்தது.

இந்நிலையில் பலரும் சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி வரும் நிலையில் அவரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது டாக்டர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார்.

அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், என் சில படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்துள்ளது. என்னதான் அப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே இனி வசூல் ரீதியாக மட்டும் வெற்றிபெற்றால் பத்தாது என்றும், விமர்சன ரீதியாகவும் என் படங்கள் பாராட்டை பெறவேண்டும் என்றும் முடிவெடுத்தேன்.

மாறிய சிவகார்த்திகேயன்

அதன் காரணமாகத்தான் டாக்டர் போன்ற கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட படங்களில் நடித்தேன். ஒவ்வொரு படத்திலும் என் நடிப்பில் ஏதேனும் வித்யாசம் காட்டவேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் சிவகார்த்திகேயன்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இதன் காரணமாகத்தான் சிவகார்த்திகேயன் தற்போது வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் என பேசி வருகின்றனர். மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகின்றார். இப்படமும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகும் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.