பாக்கெட்டில் மது விற்பனை எப்போது? அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரது இலாக்காக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் மாற்றப்பட்டன.

வீட்டு வசதித்துறையை கவனித்து வரும் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

மதுவிலக்கு துறை சார்பாக அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அவர் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டாஸ்மாக் திறக்கும் நேரம், டெட்ரா பாக்கெட் மது விற்பனை ஆகியவை குறித்து பேசினார்.

திடீரென எகிறிய டாஸ்மாக் ஊழியர் !

டாஸ்மாக் திறக்கும் நேரம்!

“டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என எந்த இடத்திலும் நாங்கள் கூறவில்லை. டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்க்கும் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளோம்.

பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா வசூல்!

மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனத் திட்டவட்டமாக கூறியுள்ளோம். மது பாட்டில்களால் பல்வேறு பிரச்சனைகள் வருவதால், டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னோம். ஆலோசனைகளை அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்வோம். அதற்கு ஏன் திட்டுகிறார்கள்? நான் இரண்டு நிமிடம் பேசியதை அரை நிமிடம் எடுத்தால் தவறாக தான் வரும்.

டெட்ரா பாக்கெட் மது விற்பனை

மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, கருத்துகள் கேட்கப்படும். டெட்ரா பேக், 90 மி.லி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவை வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.