சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்படப்பிடிப்பு முடிந்து படத்தின் அடுத்தக்கட்ட பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில், ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால், ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
முத்துவேல் பாண்டியன்: அண்ணாத்த படத்தின் விமர்சனத்திற்கு பிறகு, அடுத்த வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது டைகரின் கட்டளை: ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அப்படத்திற்கு சினிமா பிரபலங்கள் பலர் தாறுமாறாக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன் பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலான காட்சிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்
இசைவெளியீட்டு விழா: மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.