![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1689637994_NTLRG_20230717153312898590.jpg)
'ஜவான்' : ஆக்ஷன் ஹீரோயினாக நயன்தாரா
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த திங்கள்கிழமையன்று வெளியானது.
அதன்பின் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு 'மொட்டை' தோற்றத்தில் உள்ள ஷாரூக்கின் போஸ்டரை வெளியிட்டார்கள். அடுத்து நயன்தாராவின் போஸ்டரை சற்று முன் வெளியிட்டுள்ளார்கள்.
கையில் துப்பாக்கியுடன் நிற்கும் நயன்தாராவின் போஸ்டரைப் பார்த்தால் அவர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகிறது. நயன்தாரா அறிமுகமாகும் ஹிந்திப் படம் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழைப் போலவே ஹிந்தியிலும் நயன்தாரா வரவேற்பைப் பெறுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும்.