சென்னை மக்களே, இன்று இரவு செம மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக திடீரென மழை பெய்து வெப்பத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை பற்றிய முக்கிய அறிவிப்புகளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்திலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை

தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் அடுத்த சுற்று மழையை கொட்டப் போகிறதாம். அதுவும் இந்த முறை மும்பை பகுதிகளில் நல்ல மழைஇருக்கும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவிலிருந்து குஜராத் வழியாக பருவமழை நகரும் சமயம், மும்பை, ஹைதராபாத் போன்ற இரு மெட்ரோ நகரங்களில் அதிகளவில் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகையில் அதிகளவில் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை இருக்கும். கேரளாவிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம், கேரளாவின் வடக்கு பகுதியில் கனமழை இருக்கும். கடுமையாக இல்லாவிட்டாலும், வரும் வாரத்தில் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.