Rajinikanth – ஹுக்கும்.. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?.. பாடல் மூலம் பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்?

சென்னை: Jailer Second Single Hukum (ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் ஹுக்கும்) ஜெயிலர் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

முக்கியம் வாய்ந்த படம்: இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்து தனனி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த்.

முதல் சிங்கிள்: நெல்சன் திலீப்குமாருக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதால் நிச்சயம் இந்தப் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும்படிதான் படத்தின் ரிலீஸ் தேதியோடு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ உணர்த்தியதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். முதல் சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இரண்டாவது சிங்கிள்: முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் அது ரஜினிக்கான பாடல் இல்லை என்ற கருத்து எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. இது முழுக்க முழுக்க ரஜினிக்காக உ ருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இதனால் தலைவர் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

கவனம் ஈர்க்கும் பாடல் வரிகள்: முக்கியமாக பாடலின் வரிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு ” என்ற வரிகள் பக்காவாக ரஜினிக்கு பொருந்திப்போவதாகவும் மறைமுகமாக விஜய் உள்ளிட்டோருக்கு பதிலடி கொடுப்பது போலவும் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?: அதாவது ரஜினியின் முந்தையை இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கான சம்பளம் வெகுவாக குறைந்துவிட்டதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் விஜய்க்கான சம்பளமோ 175 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்க்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என இண்டஸ்ட்ரியிலேயே பேச்சு எழுந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

சூழல் இப்படி இருக்க இந்தப் பாடலில் மேற்குறிப்பிட்ட வரிகள் மூலம் மறைமுகமாக விஜய்க்கு ரஜினிகாந்த் பதிலடி கொடுத்து எப்போதும் தான் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை உணர்த்தியிருக்கிறார் என தலைவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.