உத்தர பிரதேசத்தில் பல ஆண்டுகளாக வீடியோக்கள் வெளியிட்டு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்த ‘யூ டியூபர்’ வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர் 24 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேசம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்லீம் சொந்தமாக யு டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ‘டிரேடிங் ஹப் 3.0’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் சேனலில் அவர் ஷேர் மார்க்கெட் தொடர்பான விபரங்களை வீடியோக்களாக பதிவிட்டு வந்துள்ளார்.
பல வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சேனலின் வாயிலாக ஒரு கோடி ரூபாய் வரை தஸ்லீம் சம்பாதித்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இந்த சேனலை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித் துறை அதிகாரிகள் தஸ்லீம் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 24 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தஸ்லீமின் சகோதரர் பெரோஸ் கூறுகையில் ”சேனல் நடத்தியதால் வந்த 1.2 கோடி ரூபாய் வருமானத்துக்கு ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தியுள்ளோம்.
நேர்மையான முறையில் சேனல் நடத்தி வருகிறோம். திட்டமிடப்பட்ட சதி காரணமாக இந்த சோதனை நடந்துள்ளது” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement