தேனி: யானை தாக்கி தோட்டத் தொழிலாளி பலி… இரவு நேர பனியின்போது நேர்ந்த சோகம்!

​தேனி மாவ​​ட்டம், உத்தமபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள பண்ணைபுரத்தைச் சேர்ந்த​வர்​ செல்லம்.​ இவருக்குச்​ சொந்தமான தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக முருகன் என்பவர் பணியாற்றி​ வந்திருக்கிறார். ​இவர் நாள்தோறும் இரவு நேரங்களில் தோட்டக் காவல் பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

முருகன்

​இந்த நிலையில் ​​நேற்று இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற முருகன், ​தோ​ட்ட​த்தில் இரவு நேரத்தில் உலாவந்த காட்டு யானையால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.​ ​அதிகாலை தோட்டப் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளி உயிரிழந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கோம்பை காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

​தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீ​ஸார், ​உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.​ ​இது குறித்து வழக்கு பதிவு​​செய்த கோம்பை போலீ​ஸா​ர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​ ​​​மேலும் தோட்டத் தொழிலாளி முருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம், அந்தப் பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

பலியான முருகன்

​அடிக்கடி விளைநிலங்களுக்கு உலா வரும் காட்டு யானைகளை ​விரட்டவும், ​இடமாற்றம் செய்வதற்கு​ம்​ வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை, விடுத்திருக்கின்றனர். யானை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.