சேலம்: இந்தியாவின் இளைஞர் வளத்தை தொழில்நுட்பமிக்கவர்களாக மாற்றும் வகையில் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நாடு முழுவதும் 100 இடங்களில் செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. பெரியார் பல்கலைக்கழக தொழில்முனைவோர் வளர்ச்சிப் பூங்கா சார்பில் MESC, DEEPAM EDUTECH, MONOLITH, MICROSOFT, CAMBRIDGE,EDSCOPE ஆகிய ஐந்து அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் வளத்தை தொழில்நுட்ப ரீதியாக பயன்படுத்திடும் வகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆராய்ச்சி பூங்கா (PUTER PARK) சார்பில் “தொழில் 4.0 தொழில்நுட்பம் ஒன்றிணைத்தல் (“INDUSTRY 4.0 TECHNOLOGY CONVERGENCE”) எனும் தலைப்பில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. உயர் சாதனைகளை படைக்க இளைஞர்களை உருவாக்கும் திறன்மேம்பாட்டுத் திட்டம் (UDHAYAS) – பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி முன்ணணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன் முன்னிலையில் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் பேராசிரியர் கே.தங்கேவல், தீபம் மருத்துவமனைக் குழுமத் தலைவர் டாக்டர் அண்ணாமலை பாண்டியன், மோனோலித் நிறுவன துணைத் தலைவர் தினேஷ், ஆக்டிவ் எடு நிறுவன இயக்குநர் ரமேஷ் கிருஷ்ணா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எம்.இ.எஸ்.சி நிறுவன முதன்மை செயல் அலுவலர் மோகித் சோனி, எடுஸ்கோப் நிறுவன இயக்குநர் அமித் பார்க்கர் ஆகியோர் காணொளி வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
டாக்டர் அண்ணாமலை பாண்டியன் ஒரு புகழ்பெற்ற சுகாதார தொழில்முனைவோர் மற்றும் தீபம் மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர்-தலைவர்.
தீபம் எடுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தலைவராகவும் அண்ணாமலை பாண்டியன் இருக்கிறார். 1988 ஆம் ஆண்டு புகழ்பெற்ற செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவ அறிவியல் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். தாவாங்கேரிலுள்ள ஜேஜே மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஹெல்த்கேரில் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், டாக்டர் அண்ணாமலை பாண்டியன் தீபம் மருத்துவமனைகள் குழுமத்தை அதன் நிறுவனர் மற்றும் தலைவராக வழிநடத்தி வருகிறார்.
தீபம் எல்லைகளை கடந்து ஆண்டுதோறும் 250000 நோயாளிகளுக்கு சேவைகளை வழங்குகிறது. இது தவிர, புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள், கண் மருத்துவமனைகள் மற்றும் பல ஆராய்ச்சிப் பயிற்சி இணை மையங்களின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய டாக்டர் அண்ணாமலை பாண்டியன் தமிழ்நாடு சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். டாக்டர் பாண்டியன், இந்தியாவில் சென்னையிலும், அமெரிக்காவில் நியூஜெர்சியிலும் இரண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார். பார்கவ் அசோசியேட்ஸ் – ஹெல்த்கேர் ஆர்கிடெக்ட், விபிஎம்எம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ், நோவா பில்டர்ஸ், ரிவேச்சர் குரூப் – ஐடி நிபுணர்கள், ஃபின்ஸ்டீன்- நிதி ஆலோசனைக் குழு மற்றும் அல் போன்ற பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களுடனும் அவர் இணைந்துள்ளார். திசைவா இன்க்.- வென்ச்சர் கேபிடலிஸ்ட் & குளோபல் ஃபைனான்ஸ் மானிட்டரி, உலகளாவிய ஹெல்த்கேர் பிளாட்ஃபார்ம் அனைவருக்கும் ஆராய்வதற்கும் வெற்றி பெறுவதற்கும் வழங்குகிறது.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆராய்ச்சி பூங்கா சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் செயற்கைக்கோள்ஆராய்ச்சி முதன்மை மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தோராயமாக 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை நிறுவவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை நிறுவவும் இதன்மூலம் திட்டமிட்டுள்ளது. “தொழில்நுட்பம் ஒன்றிணைத்தல்” என்பதை அடிப்படையாகக் கொண்டு இதற்கான மனித வள வங்கியை உருவாக்கவும், தொழில்முனைவோரை உருவாக்கவும், ஆய்வுகளை மேம்படுத்தவும் இதன் மூலம் தொழில்துறையின் ஒத்துழைப்பை வளர்த்து இவர்களின் ஆராய்ச்சித் தேவைகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதே “உதயாஸ்”ன் நோக்கம்” என்றார்.
உதயாஸ் (UDHAYAS) இன் நோக்கங்களை அடைய, ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம் (SPV) முன்மொழியப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள PUTER பூங்கா மூலம் இந்த அமைப்பு செயல்பட உள்ளது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை திறன் சபை (MESC), மத்திய திட்டங்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பு மற்றும் தீபம் மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பிரிவான தீபம் எடுடெக் (DEEPAM Edutech), மோனோலித் (MONOLITH), டோக்கியோ, மைக்ரோசாப்ட், கேம்பிரிட்ஜ், யுகே (Cambridge,UK) மற்றும் எடஸ்கோப் (Edscope, US) ஆகியவை மூலம் பெரியார் பல்கலைக்கழகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இதனை செயல்படுத்த உள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆராய்ச்சி பூங்கா சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் செயற்கைக்கோள் ஆராய்ச்சி முதன்மை மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தோராயமாக 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை (SRC) நிறுவவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை நிறுவவும் இதன்மூலம் திட்டமிட்டுள்ளது.
மேற்காண் அனைத்து முயற்சிகளையும் சாத்தியப்படுத்திடும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக பெரியார் பல்கலைக்கழக தொழில்முனைவோர் வளர்ச்சிப் பூங்கா சார்பில் MESC, DEEPAM EDUTECH, MONOLITH, MICROSOFT, CAMBRIDGE,EDSCOPE ஆகிய ஐந்து அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று பெரியார் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைத் திட்ட அலுவலர் சசிகுமார், பெரியார் பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநர் யோகானந்தன், இணைப் பேராசிரியர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.