மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `மாவீரன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் மாவீரன் படத்தில் ‘filmography credits’- எனத் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தத் திரைப்படங்களைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.
Ober (Dutch)
2006 ஆம் ஆண்டு வெளியான இந்த ‘Ober (Dutch)’ திரைப்படத்தை அலெக்ஸ் வான் வார்மர்டாமின் இயக்கி இருக்கிறார். ஹோட்டலில் பணிபுரியும் எட்கர் என்ற வெயிட்டரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை இப்படம் எடுத்துரைக்கும். 2007 ஆம் ஆண்டு இத்திரைப்படம் கோல்டன் ஃபிலிம் விருதையும் பெற்றிருக்கிறது.
Stranger Than Fiction
‘Stranger Than Fiction’ என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க ஃபேன்டஸி காமெடி திரைப்படமாகும். மார்க் ஃபார்ஸ்டர் இயக்கிய இத்திரைப்படத்தை லிண்ட்சே டோரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் வில் ஃபெரெல், மேகிகில்லென்ஹால், டஸ்டின் ஹாஃப்மேன் ,குயின் லதிஃபா மற்றும் எம்மா தாம்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
The Gun Fighter
2014 ஆம் ஆண்டு எரிக் கிசாக் இயக்கிய குறும்படம் ( short film) ‘The Gun Fighter’. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வெளியான அதே ஆண்டே லாஸ் ஏஞ்ல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதையும், பாம் ஸ்பிரிங்ஸ் என்ற குறும்படங்களின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பெஸ்ட் ஆஃப் ஃபெஸ்ட்’என்ற விருதையும் பெற்றிருக்கிறது.
The quake
‘The quake’ என்பது ஜான் ஆண்ட்ரியாஸ் ஆண்டர்சன் இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான பேரழிவுத் தொடர்பான திரைப்படமாகும். கிறிஸ்டோஃபர் ஜோனர், அனே டால் டார்ப் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான விருதைப் இப்படம் பெற்றிருக்கிறது.
The fool
எழுத்தாளரும், இயக்குநருமான யூரி பைகோவின் மூன்றாவது திரைப்படம் ‘The Fool’. 2014 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரஷ்ய அரசாங்கங்களின் ஊழலைப் பற்றி பேசியிருக்கும். பைஸ்ட்ரோவ், நடால்யா சுர்கோவா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பைஸ்ட்ரோவ் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றிருக்கிறார்.
San Andreas
2015 ஆம் ஆண்டு வெளியான ‘San Andreas’ திரைப்படத்தை பிராட் பெய்ட்டன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் டுவைன் ஜான்சன் , கார்லா குகினோ , அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ , அயோன் க்ரூஃபுட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிலநடுக்கத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 474 மில்லியன் டாலர் வசூலித்திருக்கிறது.