Keerthy Suresh: 'மாமன்னன்' பட வெற்றி.. கீர்த்தி சுரேஷின் அடுத்த அதிரடி: தீயாய் பரவும் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழை தவிர தற்போது பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து பாராட்டுக்களை குவித்தார். இந்நிலையில் ‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ரஜினி முருகன், விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படம் தேசிய விருதை பெற்று தந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படமும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். இதனையடுத்து தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் பான் இந்திய படமாக நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ படத்தில் நடித்தும் பாராட்டுக்களை அள்ளினார்.

இந்நிலையில் தமிழில் அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் நடித்தார் கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு. பகத் பாசில், உதயநிதி நடிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தில் கம்யூனிஸ்டாக லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளியது.

Jailer:லீக்கான ‘ஜெயிலர்’ பட கதை: மாஸ் காட்ட போகும் தலைவர்.!

‘மாமன்னன்’ பட வெற்றியால் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் கீர்த்தி அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வருண் தவான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படம் தமிழில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக் என்றும், தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜவான்’ படத்தின் மூலம் நயன்தாரா இந்தி திரையுலகில் கால் பதித்துள்ள நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் நுழையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

ஒரு ரூபா சம்பளம் வாங்கலை.. மாவீரனுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி பற்றி மடோன் அஸ்வின்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.