Hero Xtreme 200S 4V – ரூ.1.45 லட்சத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி விற்பனைக்கு வெளியானது

புதிய 4 வால்வுகளை பெற்ற 200cc என்ஜின் கொண்ட பட்ஜெட் விலை ஃபேரிங் ஸ்டைல் 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் விலை ரூ.145,600 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிக சிறப்பான 200 எஸ் 4வி மாடல் மூன்று புதிய நிறங்களான மஞ்சள், கருப்பு மற்றும் கிரே நிறங்களை கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி நேர்த்தியான மேம்பட்ட எக்ஸ் சென்ஸ் நுட்ப்பத்தை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 200S 4V

சமீபத்திய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப OBDII மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற 199.6cc என்ஜின் பெற்ற எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடல் அதிகபட்சமாக 8500rpm-ல் 18.98 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.35 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட இரு பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முன்பாக விற்பனைக்கு வந்த 4 வால்வு எக்ஸ்பல்ஸ் பைக்கில் உள்ள என்ஜினை பெற்றுள்ளது.

இந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக்கில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு  276 mm டிஸ்க் முன்புறத்தில்,  220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி பைக்கின் விலை ரூ.1.45,600 ஆகும்.

Hero Xtreme 200S 4V bike price hero xtreme 200s 4v hero xtreme 200s 4v panther black

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.