சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பல் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில், அடுத்து ஒரு தரமான திரைப்படத்தை கொடுக்கும் முனைப்பில் ரஜினி தீவிரமாக இருக்கிறார்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என நடித்து வந்த ரஜினி, தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி: தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இதிர் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.
ஜெயிலர்: இதையடுத்து, நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் இருந்து தரமான இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்துள்ள ரஜின் தற்போது மாலத்தீவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஞானவேல் இயக்கத்தில்: இந்த படத்தை தொடர்ந்து, ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து லோகேஷின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதபாக கூறப்படுகிறது.
தலைவர் 171: அதற்குள் ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து முடித்துவிடுவார் என்றும் அடுத்து, தலைவர் 171 படத்தின் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் அடுத்தடுத்து வரும் ரஜினி படம் குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.