கணவருக்கு பாதபூஜை செய்த பிரணிதா

கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வதுமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் கணவனுக்கு பாதபூஜை செய்து பரபரப்பு ஏற்படுத்திருக்கிறார் நடிகை பிரணிதா. தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது திலீப் ஜோடியாக மலையாள படத்தில் நடித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை மணந்த பிரணிதா தம்பதிக்கு அர்ணா என்ற 2 வயது மகள் இருக்கிறார்.

தமிழகத்தின் ஆடி அமாவாசை போன்று கர்நாடகத்தில் பீமனா அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தில் மனைவியர் தமது கணவருக்கு பாத பூஜை செய்வது ஹிந்துக்களில் ஒரு சாரார் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்த வகையில் கடந்தாண்டு பீமனா அமாவாசையன்று கணவருக்கு பாதை பூஜை செய்யும் புகைப்படத்தை நடிகை பிரணிதா பகிர்ந்திருந்தார். தற்போது இந்த வருடம் அதே தினத்தில், மீண்டும் கணவரின் பாதத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“இன்று பீமனா அமாவாசையை முன்னிட்டு பூஜை மேற்கொண்டேன். இது ஆணாதிக்க சடங்காக சிலருக்கு தெரியலாம். ஆனால் சனாதன தர்மத்தில் இது முக்கிய வழிபாடுகளில் ஒன்று. ஹிந்து வழிபாட்டில் ஆணாதிக்கம் என்பது அடிப்படை அற்றது. பெண் கடவுளையும் இணையாக வழிபடுகிறோம்” என்று தனது பதிவில் பிரணிதா தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.