சந்திரயான் – 3ன் அடுத்த அப்டேட்… என்னன்னு பாருங்க!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து கடந்த 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. எல்விஎம்3 எம் 4 ராக்கெட்டில் சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. ஏவப்பட்டதில் இருந்து விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நடந்தது.

சென்னை திரும்பும் ஸ்டாலின்… சம்பவத்திற்கு தயாராகும் பாஜக… அண்ணாமலை கொடுத்த அப்டேட்!

விண்கலம் அப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதையடுத்து இரண்டாவது சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் பணி நேற்று நடைபெற்றது. இதன்படி, விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. உயரத்தில் இருந்தது.

இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடையே நடைபெற்றது. இதுவும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விண்கலத்தின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வரும் 20 ஆம் தேதி பிற்பகல் 2- 3 மணிக்குள் நடைபெறும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க தனி வாரியம்… நிராகரிக்கவும் அதிகாரம்… தமிழக அரசின் அதிரடி அரசாணை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.