UCC-ஐ எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம் | பாபநாசத்திலிருந்து நீர் திறந்த அப்பாவு – News In Photos July 19, 2023 by விகடன் ராமநாதபுரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகளின் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. புதுச்சேரி: தீ விபத்தில் வீடு சேதமடைந்த நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பாதிப்படைந்த வீட்டுக்கு ரூபாய் 50,000-க்கான காசோலையை வழங்கினார். சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. வேலூர்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் நல அலுலலகத்தில் ஸ்மார்ட் போன் பெறுவதற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள். கன்னியாகுமரி: நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில். காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கன்னியாகுமரி: ஆடி மாத விழாவையொட்டி நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அம்மன். திருநெல்வேலி: பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரைத் திறந்து வைத்தார். தென்காசி: தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை சார்பில் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் அரசு தொழிற்பயிற்சி மையங்களை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். ராமநாதபுரம்: வானிலை அறிவிப்பின்படி ராமேஸ்வரத்தில் பலத்தக் காற்று வீசுவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தினர். விருதுநகர்: மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். திண்டுக்கல்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி: மாநிலப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையிலான கிராமவாசிகள், அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். புதுச்சேரி: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார். புதுச்சேரி: மணவெளி பகுதியில் 100 நாள்கள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நீலகிரி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான படிவங்கள் நியாய விலைக் கடைகளில் வரும் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்திருக்கிறார். நீலகிரி: ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியிருக்கும் நிலையில், விவசாய தோட்டத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் உடை அணிந்து களை பறிக்கும் தொழிலாளர்கள். சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர்: அனைத்து உள்ளாட்சிப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Source link