Nazriya: 12 வயது வித்தியாசம்… ஃபஹத் பாசிலுக்காக திருமண முடிவை மாற்றிய நஸ்ரியா… காரணம் இதுதானா?

சென்னை: குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம்.

தமிழில் நேரம் திரைப்படம் மூலம் பிரபலமான அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

12 வயது வித்தியாசம் இருந்தும் ஃபஹத் பாசிலுக்காக தனது திருமண முடிவை மாற்றிக்கொண்டாராம் நஸ்ரியா.

ஃபஹத் பாசிலுக்காக மனம் மாறிய நஸ்ரியா: குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என வலம் வந்த நஸ்ரியாவுக்கு ‘நேரம்’ திரைப்படம் நாயகியாக நல்ல அறிமுகம் கொடுத்தது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானதால், இவருக்கு சிறப்பான அறிமுகம் கிடைத்தது. க்யூட்டான நடிப்பு, குறும்புத்தனம் என ரசிகர்களை கட்டிப் போட்ட நஸ்ரியா, தமிழ், மலையாளத்தில் சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழில் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களிலும், மலையாளத்தில் சலாலா மொபைல்ஸ், ஓம் சாந்தி ஒஷானா, பெங்களூர் டேஸ், கூடே, ட்ரான்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இதில் பெங்களூர் டேஸ் படத்தில் நடித்த போது அவருக்கும் ஃபஹத் பாசிலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்நேரம் நஸ்ரியாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.

அதேநேரம், நஸ்ரியாவுக்கும் ஃபஹத்துக்கும் இடையே 12 வயது வித்தியாசம் இருப்பதும் அவரை அதிகம் யோசிக்க வைத்ததாம். ஆனால், முதலில் பல தோல்விகளை சந்தித்த ஃபஹத், அதன் பின்னர் கடும் போராட்டங்களுடன் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். அதுமட்டும் இல்லாமல் ஃபஹத்தின் கேரக்டரும் நஸ்ரியாவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.

 Nazriya: The reason why Nazriya got married to Fahadh Faasil 12 years apart

தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசையை துறந்த நஸ்ரியா ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொள்ள ஓக்கே சொல்லிவிட்டாராம். மேலும், கடைசி வரை உன்னை ஒரு குழந்தை போல கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என நஸ்ரியாவிடம் கூறியுள்ளார் ஃபஹத். இதனால் ஃபஹத் பாசில் மீது ரொம்பவே இம்ப்ரஸ் ஆன நஸ்ரியா, தனது கேரியர் குறித்த கனவையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு திருமணம் செய்ய ரெடியாகிவிட்டாராம்.

பெங்களூர் டேஸ் திரைப்படம் வெளியான அதே 2014ம் ஆண்டிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது ஃபஹத் பாசிலுக்கு 31 வயதாக இருந்த நிலையில், நஸ்ரியாவுக்கு 19 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக வெற்றிகரமான நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் அவர்கள், இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.