வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அதீதமான பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுதும் எதிரொலித்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா முதல், டெக்சாஸ் மாகாணம் வரை, கடந்த 7 நாட்களாக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 7 நாட்களில் 860க்கும் மேற்பட்ட, அதிகமாக பதிவான வெப்ப சாதனைகளை அமெரிக்கா முறியடித்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகரான பீனிக்ஸ் நகரில், உலகில் அதிக வெப்பம் பதிவாகி சாதனையை படைத்துள்ளது. அங்கு 47.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் வெப்பம் 46 டிகிரி செல்சியசை தொட்டதால், 23 நகரங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர ரோம், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அதிக வெப்பம் நிலவுவதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement