சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
தன்னுடைய மகள் இனியாவின் +2 ரிசல்ட் வந்த சூழலில் நிச்சயதார்த்தத்திற்கு சமைக்க சென்ற பாக்கியா, இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்கிறார்.
தன்னுடைய உதவியாளர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு, சிக்னல் கிடைக்காததால், தன்னுடைய மகளுடன் பேசுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்ட நிலையில், சமையலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
நிச்சயதார்த்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தவிப்பில் பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வீட்டை மீட்கும் மற்றும் வீட்டை ரிஜிஸ்டர் செய்யும் எபிசோட்கள் ஒளிபரப்பாகி சற்றுதான் ஓய்ந்தது. ஆனால் உடனடியாக அடுத்த பரபரப்பிற்கு சீரியல் தயாராகியுள்ளது. இனியாவிற்கு +2 ரிசல்ட் வந்த நிலையில், அவர் ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்து குடும்பத்தினரை பெருமை படுத்தியுள்ளார்.
ஆனால், இந்த சமயத்தில் கூடவே இருந்து பெருமைப்பட வேண்டிய பாக்கியா, நிச்சயதார்த்தத்திற்காக சமையல் கான்டிராக்ட் ஒன்றை எடுத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பிரம்மாண்டமான வீட்டிற்கு சென்று சமையலை செய்துவந்தார். எல்லாம் முடிந்த நிலையில், தன்னுடைய உதவியாளர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, தன்னுடைய மகளுக்கு கால் செய்ய அவர் முயற்சி மேற்கொண்டார். அந்த இடத்தில் சிக்னல் கிடைக்காதால், கொஞ்சதூரம் தள்ளி சென்று அவர் முயற்சி மேற்கொண்டார்.
இதனிடையே, சமையலில் பாயசம் தீய்ந்து விட்டதால், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் சண்டை போடுகின்றனர். தங்களை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதாக சண்டைக்கு போகின்றனர். இதனால் நிச்சயதார்த்தம் நிற்கும சூழல் ஏற்படுகிறது. இதனால் அனைவரும் பாக்கியாவை திட்டித் தீர்க்கின்றனர். அவர்களை பிணையக் கைதியாக உட்கார வைக்கின்றனர். நிச்சயதார்த்தம் நின்றுவிட்டால், அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவதாக கூறுகின்றனர்.
இதனால் தவிப்பிற்கு உள்ளாகிறார் பாக்கியா. தன்னுடைய மகளின் ரிசல்ட் குறித்தும் அறிந்துக் கொள்ள முடியாமல், நிச்சயதார்த்தத்தின் சமையலையும் சொதப்பி அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இதனிடையே இனியாவை பள்ளிக்கு வரசொல்லி, நிர்வாகம் கூறுகிறது. அவர், தன்னுடைய தாத்தா, சகோதரர்களுடன் அங்கு செல்கிறார். இதனிடையே விஷயத்தை கேள்விப்படும் கோபி, மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து சேர்கிறார்.
அங்குவந்து தன்னுடைய மகளை கட்டியணைக்கிறார். அவரது மகிழ்ச்சியை அவரால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் என அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். பெற்றோருடன் பள்ளிக்கு இனியாவை வரும்படி பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், பாக்கியா வரமுடியாத சூழலில் சிக்கிக் கொள்கிறார். பள்ளிக்கு கோபி, ராதிகாவுடன் வந்துள்ள நிலையில், அடுத்தது தன்னுடைய அப்பாவுடன் கொண்டாட்டத்தில் இனியா ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.