கிருபா முனுசாமி தனிப்பட்ட வெறுப்பால் பொய்யாக குற்றம் சுமத்துகிறார் : ஆதாரங்களை வெளியிட்ட விக்ரமன்

பிக்பாஸ் பிரபலமும், விசிக கட்சியின் உறுப்பினருமான விக்ரமன் மீது கிருபா முனுசாமி பாலியல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இது தொடர்பில் விசிக கட்சியின் தலைமைக்கும் புகார் அளித்திருந்தார். ஆனால், விக்ரமன் மீது இதுவரை விசிக கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கும் விக்ரமனுக்குமிடையேயான தனிப்பட்ட உரையாடல்களை ஸ்கிரீஷாட்டாக சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விக்ரமன் மீது மேலும் குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து தற்போது ட்விட்டரில் விளக்கமளித்துள்ள விக்ரமன், கிருபா முனுசாமி தன் மீது சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெல்வேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்கும். அதுபோல் இந்த கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. இதில் குற்றம் சுமத்தியவரால் பாதிக்கப்பட்டவன் நான் மட்டுமே. என் மீதான குற்றச்சாட்டு முழுவதும் என் மீதான தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக என்னுடைய அரசியல் வாழ்வை முடிவுகட்டும் நோக்கில் கூறப்பட்டது' என்று கூறியுள்ளார். மேலும், கிருபாவுக்கு விக்ரமன் தரவேண்டிய மொத்த பணத்தையும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே தந்துவிட்டதாகவும், அதுபோல் கிருபா எனக்காக எழுதி கொடுத்த கட்டுரைகளுக்கு கூட பணம் தருவதாக கூறியிருந்ததாகவும் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வகையில் கிருபாவுக்கு ரூ.12 லட்சம் பணம் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் கிருபா 15 ஜூன் 2022 அன்று தனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் பகிர்ந்து ஒரு அப்யூஸருக்கு இப்படி யாராவது கடிதம் எழுதுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.