இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தநிலையில் அதன் தலைநகரான ராவல்பிண்டியில் நேற்று இரவில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது.
அங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தநிலையில் அதன் சுற்றுச்சுவரை ஒட்டி குடிசைகள் அமைத்து தொழிலாளர்கள் வசித்து வந்தனர். காற்றில் அதன் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து குடிசைகள் மேல் விழுந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மாயமாகி உள்ளதாக மீட்பு சேவை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :