மணிப்பூர் சம்பவம்… 8 நாள் தான் டைம்… கோபத்தில் கொந்தளித்த உச்ச நீதிமன்றம்!

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பார்த்து பலரும் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

பிரதமர் மோடி முதல் சாமானியர்கள் வரை பலரும் தங்கள் வேதனையை பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மணிப்பூர் கொடூர சம்பவம்

நாகரிக சமூகத்தில் இப்படி ஒரு கொடூரத்தை பார்ப்பது மிகப்பெரிய அவமானம் என்கின்றனர். சம்பந்தப்பட்ட வீடியோவை உடனடியாக ட்விட்டரில் இருந்து நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

வைரலான வீடியோவால் பெரும் அதிர்ச்சி

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவால் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் வரும் ஜூலை 28ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கோபம்

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அந்த வீடியோ மே மாதத்தில் கூட எடுக்கப்பட்டிருக்கலாம்.

பிரதமர் மோடி வேதனை

ஆனால் அதில் நடந்துள்ள கொடுமைகள் பதற வைக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருந்த பிரதமர் மோடி பேசுகையில், மணிப்பூர் சம்பவத்தில் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

வெட்கப்பட வேண்டிய விஷயம்

குற்றவாளிகள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. கடும் தண்டனையை சட்டம் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.

பல இடங்களில் போராட்டம்

மேலும் எதிர்க்கட்சிகள் இந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வருகின்றன. தலைநகர் டெல்லியில் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, பெண்களிடம் கொடூரமாக நடந்து கொண்ட முக்கிய குற்றவாளி மணிப்பூர் மாநிலம் தவுபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூரில் கூடுதல் போலீசாரும், ராணுவமும் விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.