வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தான் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நகைச்சுவை நாயகனாக கலக்கி வந்த வடிவேலு தன்னால் வித்தியாசமான கதாபாத்திரங்களும் பண்ணமுடியும் என மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மாமன்னன் படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கைத்தட்டலையும் அள்ளினார் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு சற்று சறுக்கலை சந்தித்தார் என்றுதான் சொல்லவேண்டும். பல சர்ச்சைகள் ,பல பிரச்சனைகள் என அனைத்தையும் கடந்த வந்த வைகைப்புயல் மீண்டும் பழைய மாதிரி படங்களில் நடிக்க துவங்கினார்.
கமலின் அரசியல் படம்
அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அப்படம் கைகொடுக்கவில்லை. இதையடுத்து வடிவேலு இனி அவ்வளவுதான் என சில விமர்சனங்கள் வந்தன. அதற்கெல்லாம் மாமன்னன் படத்தின் மூலம் பதிலடி தந்தார் வடிவேலு.
முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா – கார்த்தி..இயக்குனர் யார் தெரியுமா ?
மாமன்னனாக நடித்த வடிவேலுவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் வித்யாசம் காட்டி ரசிகர்களை வியக்கவைத்தார் வடிவேலு. இதன் மூலம் தன் திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக வைகைப்புயல் துவங்கியுள்ளார். இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு பிறகு மளமளவென படங்களில் கமிட்டாகி வரும் வடிவேல் உலகநாயகன் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன.
கூட்டணி அமைக்கும் வடிவேலு
கமலின் கதையில் உருவாகும் ஒரு படத்திற்க்கா கமல்ஹாசனுடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும், மாமன்னன் படத்தில் நடித்ததை போல வடிவேலு இப்படத்திலும் சீரியசான அரசியல்வாதியாக நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் இப்படத்தை யார் இயக்கப்போகின்றார் என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும்
கமல்
மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தில் தான் வடிவேலு சீரியஸான அரசியல் வாதியாக நடிப்பார் என ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கமலுக்காக மீண்டும் அரசியல் வாதியாக வடிவேலு நடிக்க இருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களிலும் ,தமிழ் சினிமா ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது
.