Kalki 2898 AD: ஆதிபுருஷ் ராமரை தொடர்ந்து ’கல்கி’ அவதாரமெடுத்த பிரபாஸ்.. முதல் பார்வை எப்படி இருக்கு?

சென்னை: நடிகையர் திலகம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதுகளை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் கல்கி 2898 ஏடி.

நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் அட்டகாசமான முதல் க்ளிம்ஸ் அமெரிக்காவின் காமிக் கானில் சற்றுமுன் வெளியானது.

ஷாக்கிங் சர்ப்ரைஸாக சார்பட்ட பரம்பரை படத்துக்கு பிறகு நடிகர் பசுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த ஃபர்ஸ்ட் க்ளிம்ஸில் இடம்பெற்றுள்ளார்.

கல்கி அவதாரம் எடுத்த பிரபாஸ்: பகவான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக சொல்லப்படும் கல்கி அவதாரத்தையே நடிகர் பிரபாஸ் தற்போது எடுத்துள்ளார். ஏற்கனவே ப்ராஜெக்ட் கே டைட்டிலுக்கான அர்த்தமாக கல்கி இருக்கும் என கெஸ் பண்ணது போல அதே டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆனால், 2898 AD என்பது தான் கொஞ்சம் நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவ்வளவு காலம் தள்ளியா கல்கி அவதாரம் இருக்கும் என்றும், ரொம்ப ஃப்யூச்சராக படத்தை யோசித்து இயக்கி இருக்கிறாரே நாக் அஸ்வின், ஆனால் பார்ப்பதற்கு ஸ்டார் வார்ஸ், டூன் படங்களின் சாயால் தெரிகிறதே என ட்ரோல்களும் குவியத் தொடங்கி உள்ளன.

Prabhas in Kalki look

கல்கி க்ளிம்ஸ் எப்படி இருக்கு?: நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் பகவான் விஷ்ணுவின் ராம அவதாரத்தில் நடித்திருந்தார். மாடர்னைஸ்டு ராமாயணமாக அது வெளியானது என ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகின. இந்நிலையில், அடுத்ததாக விஷ்ணுவின் கல்கி அவதாரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள முதல் க்ளிம்ஸில் சூப்பர் ஹீரோவாக பிரபாஸ் கெத்தாக காட்சியளிக்கிறார். தீபிகா படுகோன் போராளியாக வருகிறார். ஒரு இன மக்களை 2898ம் ஆண்டு அடிமைப்படுத்து ஆள்கிறது ஒரு மோசமான தலைவனை கொண்ட கூட்டம். நடிகர் பசுபதி அப்பாவி ஜனங்களின் தலைவனாக நடித்துள்ளார். அவர்களை காப்பாற்ற அவதார புருஷராகவோ அல்லது சூப்பர் ஹீரோ கல்கியாகவோ வருகிறார் பிரபாஸ் என்கிற விதத்தில் இந்த முதல் க்ளிம்ஸ் இருக்கிறது.

இந்த உலகத்தில் தான் கதை நடக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஸ்டார் வார்ஸ், டூன் படங்களில் பார்ப்பதை போல வேற்று கிரக வாசிகள் போலவே அந்த செட்டும், மக்களும் காணப்படுகின்றனர். சிஜி காட்சிகள், க்ரீன் மேட் வாடைகள் ஆதிபுருஷ் அளவுக்கு இல்லை என்றாலும், இன்னுமே சிறப்பாக இருந்திருக்கலாமோ என்கிற ஃபீலிங்கை தான் தருகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.