ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தானில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ராஜஸ்தான் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அத்துடன் 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ராஜஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 அலகுகளாக பதிவாகி இருந்தது.
இதே போல மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது.