பதவிக் காலம் முடிவடைந்து நாடு திரும்பும் சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் (19) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.
கோவிட் தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் சவாலான காலகட்டத்தில் தனது இராஜதந்திர பதவிக் காலத்தில் தனக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கியதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கடினமான மற்றும் சவாலான ஒரு காலகட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக தூதுவர் ஃபர்க்லரின் முயற்சிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பொருளாதார மீட்சி செயன்முறையில் வெற்றி பெற்றதற்காக தூதுவர் ஃபர்க்லர் அரசாங்கத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இலங்கை சுற்றுலாத்துறையானது வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சுவிஸ் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு திட்டங்கள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.
பிரதமர் ஊடக பிரிவு