பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என கூறிவரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மேகதாது அணை சர்வே பணிகள் தொடர்பாக மேலும் 29 துணை வன அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் தடைபட்டு விடும். காவிரி தண்ணீர் இல்லை என்றால், டெல்டா பாசனம் செயலிழந்து விடும். […]