தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக திகழ்ந்தவர் பிரபுதேவா. தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன்னுடைய மனைவி, மகளுடன் பிரபுதேவா திருப்பதி சென்றுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர்., பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வெற்றியாளராக வலம் வந்தவர் பிரபுதேவா. பாலிவுட்டிலும் இவர் தடம் பதித்துள்ளார். பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிரபுதேவா, ரமலத் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து ‘வில்லு’ படத்தினை இயக்கிய சமயத்தில் நயன்தாராவை காதலித்தார். ஆனாலும் இந்த காதல் திருமணம் வரை செல்லவில்லை. அதன்பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் பிரபுதேவாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
இந்த அறிமுகம் நட்பாகி காதலில் வந்து நின்றுள்ளது. இதனையடுத்து பிரபுதேவா, ஹிமானி சிங் இருவரும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது பிறந்தநாளன்று பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகியது.
Kamal Haasan: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!
இந்நிலையில் பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவாவின் அப்பாவான நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டருக்கு பிறந்த மூவரும் ஆண்கள். அதேபோல் பிரபுதேவா, ரமலத் தம்பதியினருக்கும் மூன்று மகன்கள் பிறந்தனர். இந்நிலையில் தான் தற்போது சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் முதன்முதலாக பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதியினர் மூலமாக பெண் வாரிசு பிறந்துள்ளது.
இந்நிலையில் பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங் மற்றும் தனது கைக்குழந்தையான மகளுடன் நேற்றைய தினம் திருப்பதி சென்றுள்ளார். விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கொடுத்த தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுள்ளார். இது சம்பந்தமான வீடியோ மற்றும் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Jailer Audio Launch: தலைவரோட மாஸ் ஸ்பீச் ரெடி: சரவெடியாய் வெளியான அறிவிப்பு.!