Kamal Haasan: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

தமிழ் சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என போற்றப்படுபவர் நடிகர்
கமல்
ஹாசன். திரையுலகில் இவர் கால் பதிக்காத துறையே இல்லை. அந்த வகையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. கடந்த 43 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ராஜ் கமல் நிறுவனம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக நளதமயந்தி, விருமாண்டி, விஸ்வரூபம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் கமல். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட் சினிமாவே வியந்து பார்க்கும் வெற்றியை படைத்த ‘விக்ரம்’ படத்தினையும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் அர்ஜுனர் காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், எங்களது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி தருவாதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும், அதனை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Dhruva Natchathiram: ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் அதிரடி மாற்றம்: ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கமா.?

ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இம்மாதிரியான மோசடிகள் நடந்து வருகின்றன. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் தயாரித்து வருகின்றன.

அதே போல் ‘இந்தியன் 2’ படத்தினை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. எச். வினோத் இயக்கத்தில் ‘KH 233’ படமாக உருவாகவுள்ள இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப்படங்களை தொடர்ந்து கமலின் ‘KH 234’ படத்தினை மணிரத்னம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aneethi Review: அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.