வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாகா: வங்கதேசத்தில் உள்ள ஹிந்து கோயிலில் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில் நிமாத்பூர் கிராமத்தில் உள்ள துர்கா கோயிலில் புகுந்த கலில் மியா என்பவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தினார். இதனையறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஒன்று கூடினர். கலில் மியாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/gallerye_150402867_3383198.jpg)
மாவட்ட எஸ்.பி.,யிம் கைதை உறுதி செய்ததுடன், எதற்காக அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவில்லை எனக்கூறினார்.
தாக்குதல் சம்பவம் ஹிந்து மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகி கூறியுள்ளார். இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நிமாத்பூர் கிராமத்தில் வசிக்கும் சகோதரியை காண வந்த கலில் மியாவுக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலில் மியா, கோயிலுக்குள் புகுந்து 6 சிலைகளை சேதப்படுத்தியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement