ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து இன்னொரு விக்கெட்டும் வெளியேறி விட்டதாக பரபரப்பு தகவல்கள் லீக்காகி உள்ளன.
மகரிஷி படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வந்தார். ஆனால், ஸ்ரீலீலா என்ட்ரி ஆனதுமே பூஜா ஹெக்டே வெளியேறியதாக தகவல்கள் கசிந்தன.
அடுத்து இசையமைப்பாளர் தமன் வாழைப்பழம், மோர் எல்லாம் சாப்பிடுங்கன்னு ட்வீட் போடுற அளவுக்கு கடுப்பாகி விட்டார். இந்நிலையில், மகேஷ் பாபு படத்தில் இருந்து ஒளிப்பதிவாளரும் ஓடிவிட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம்: கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மகேஷ் பாபு கடைசியாக நடித்த சர்காரு வாரி பட்டா படத்தில் எந்தவொரு சரக்கும் இல்லையென படம் படுதோல்வியை சந்தித்தது.
மீண்டும் கம்பேக் கொடுக்க பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் உடன் கைகோர்த்த மகேஷ் பாபு குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் மசாலா படமாக உருவாகி வரும் இந்த படம் உருப்படியாக வருமா? அல்லது டிராப் ஆகி விடுமா? என்கிற கேள்வி தற்போது #GunturKaaram ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்டாக்கி உள்ளது.
பூஜா ஹெக்டே போயாச்சு: குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வந்தார். தொடர்ந்து அவர் நடித்து வரும் பெரிய படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், படக்குழு என்ன நினைத்தது என்றே தெரியவில்லை. இளம் நடிகை ஸ்ரீலீலாவை உள்ளே கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் படத்தில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே வெளியேறி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்தன.
காண்டான தமன்: அதன் பின்னர், வாரிசு படத்துக்கு தமன் போட்ட பாடல்கள் எதுவுமே பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், குண்டூர் காரம் படத்திற்காக தயாரிப்பாளரிடம் பெரிய பில்லே போடுகிறார் தமன் என்கிற பஞ்சாயத்து ஒன்று கிளம்பியது.
தமன் நீக்கப்பட்டு அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. கடுப்பான தமன் என் அலுவலகத்துக்கு வாங்க, வாழைப்பழமும் மோரும் தருகிறேன் என ட்வீட் போட்டு தனது கடுப்பை கொட்டியிருந்தார். இதுவரை அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.
ஒளிப்பதிவாளரும் ஓடிட்டாரா: மேலும், படத்தின் ஸ்டன்ட் இயக்குநர்களும் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் த்ரி விக்ரம் உடன் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த பி.எஸ். வினோத் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை செம டென்ஷனில் ஆழ்த்தி உள்ளன.
திட்டமிட்டப்படி படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வருமா? அல்லது தாமதமாகுமா? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இது மகேஷ் பாபு படமா அல்லது பிக் பாஸ் வீடா இப்படி வாரம் வாரம் ஒருத்தர் வெளியேறுறாங்களே என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல்களையும் பதிவிட்டு வருகின்றனர்.