வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியை சேர்ந்ததொழில் அதிபர் ஒருவர் லண்டனில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை குடும்ப அலுவலகத்திற்காக வாங்கி அசத்தி உள்ளார்.
லண்டனில் வசித்து வருபவர் ரவி ரூயா. இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபரான இவர் எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்தவராவார். இவர் லண்டனில் உள்ள கட்டடம் ஒன்றை சுமார் 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்து வசப்படுத்தி உள்ளார்.
லண்டனில் புகழ்பெற்ற ரீஜன்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ளது. ஹனோவர் லாட்ஜ் மேன்சன். இந்த கட்டடம் முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ராஜ்குமார் பக்ரி என்பவரிம் இருந்து 2012 ம் ஆண்டில் ரஷ்ய அரசின் எரிசக்தி நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரியான ஆண்ட்ரே கோன்சரென்கோ வசம் இருந்து 120 மில்லியன் பவுண்டுக்கு குத்தகைக்கு வாங்கி இருந்தார்.
தற்போது ஆண்ட்ரே கோன்சரென்கோ வசம் இருந்து ரவி ரூயா இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,200 கோடிக்க கைவசப்படுத்தி உள்ளார் இது குறித்து ரவிரூயாவின் அலுவலக செய்தி தொடர்பாளரான வில்லியம் ரெகோ இமெயிலில் தெரிவித்து இருப்பதாவது: இது குடும்ப அலுவலகத்திற்கு கவர்ச்சிகரமான முதலீடாக அமைகிறது என குறிப்பிட்டுஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement