மெஜிசியனாக பணத்தை கடத்தும் சதீஷ்.. வித்தைக்காரன் மிரட்டலான டீசர்!

சென்னை: நடிகர் சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசரை ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வித்தைக்காரன். முன்னதாக கதாநாயகனாக நாய் சேகர் மற்றும் ஒ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.

ஓ மை கோஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் சதீஷ், ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளனர்.

வித்தைக்காரன்: இயக்குநர் வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வித்தைக்காரன் திரைப்படத்தில், சதீஷ் மேஜிசியனாக நடித்துள்ளார்.முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். இதில் சிம்ரன் குப்தா, ஆனந்த் ராஜ், ரமேஷ் திலக், ஜான் விஜய், தங்கதுரை மற்றும் இயக்குனர் வெங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாய ஜால மந்திர வித்தை: யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி பி ஆர் இசையமைத்திருக்கிறார். மாய ஜால மந்திர வித்தை செய்யும் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Comedy actor sathish starring vithaikaaran teaser out

டீசர் வெளியீடு: இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் நாயகன் சதீஷ், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை தன்னுடைய மாயாஜால வித்தையால் கடத்தி வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கைவசம் உள்ளபடம்: இப்படத்தையடுத்து நடிகர் விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘4G மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களை நடிகர் சதீஷ் தனது கைவசம் வைத்து இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.