Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது

சிட்ரோன் நிறுவனத்தின் சி3 அடிப்படையிலான சி3 ஏர்கிராஸ் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் நிலையில் கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் வரவுள்ளது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் 7 இருக்கை கொண்ட மாடல் ரூ.10 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, போட்டியாளர்கள் அதிநவீன வசதிகள் வழங்கும் நிலையில் குறைந்த வசதிகளை மட்டும் பெற உள்ளது.

Citroen C3 Aircross

படஜெட் விலையில் வரவிருக்கின்ற சி3 எஸ்யூவி கார் மாடல் ஆனது இந்நிறுவனத்தின் மூன்றாவது ஐசி என்ஜின் பெற்ற மாடலாகுஃ. ஏற்கனவே, இந்திய சந்தையில் சி3 எஸ்யூவி, சி3 ஏர்கிராஸ், மற்றும் சி5 ஏர்கிராஸ் ஆகும். இதுதவிர , இ-சி3 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகின்றது.

5 இருக்கை பெற்ற காரின் பூட் கொள்ளளவு 444 லிட்டர் மற்றும் 7 இருக்கை மாடலில் மூன்றாவது வரிசை இருக்கையை முழுமையாக நீக்க முடியும் என்பதனால் அதிகபட்சமாக 511 லிட்டர் பெற்றிருக்கும்.

சி3 ஏர்கிராஸ் காரில் முதற்கட்டமாக, 110PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெறும். ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும்.

பாதுகாப்பு வசதிகளில் இரட்டை முன் ஏர்பேக், டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட்  ஆகிய வசதிகளை பெறுவது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விபரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.