வருண் தேஜ் 14வது படத்தின் அப்டேட்!
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தேஜ். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த கானி படம் தோல்வி அடைந்தது. விரைவில் நட்சத்திர நாயகி லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ய உள்ளார் வருண் தேஜ்.
இந்த நிலையில் வருண் தேஜ்-ன் 14வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருண் தேஜ்-ன் 14வது படத்தை பலாஷா, ஸ்ரீ தேவி சோடா சென்டர் ஆகிய படங்களை இயக்கிய கருண குமார் இப்படத்தை இயக்குகிறார். 1960ம் காலகட்டத்தில் நடைபெறும் கதை களத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஜூலை 27ம் தேதி அன்று இந்த படம் பூஜை உடன் தொடங்குகிறது.