சென்னை மத்திய மாநில அரசுகள் மணிப்பூர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார். மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தடுக்க தவறிய பாஜக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் துணை பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், “மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். […]