வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இதில் ஒன்று காசி விஸ்வநாதர் கோவில் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளதா? என்பதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்பதும். வாரணாசி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
![Varanasi: Archaeological Survey team conducts survey of Gyanvapi mosque complex Varanasi: Archaeological Survey team conducts survey of Gyanvapi mosque complex](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot14039-1690165214.jpg)
இதனடிப்படையில் ஞானவாபி மசூதிக்கு நேற்று தொல்லியல் துறை வல்லுநர்கள் குழு சென்றது. அங்கு மசூதியை பார்வையிட்ட பின்னர் இன்று முதல் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கும் என தெரிவித்தனர். இன்று காலை 7 மணி முதல் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.